பெய்ஜிங், 20 மே (பெர்னாமா) -- சீனாவில் உருவாக்கப்படும் மனித இயந்திரங்களால், மனிதர்களின் வேலை பறிபோகாது என்று பெய்ஜிங் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான துணை இயக்குநர் லியாங் தெரிவித்தார்.
அதன் உருவாக்கத்தினால் பெரிய அளவில் வேலையிண்மை சிக்கல் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
செயல்திறனை அதிகரித்து, ஆபத்தான சூழல்களில் மனித இயந்திரங்கள் வேலை செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
அதோடு, மனிதர்கள் செய்ய விரும்பாத வேலைகளையும் இயந்திரங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று லியாங் விவரித்தார்.
மனிதர்கள் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கும் பொழுது இயந்திரங்கள் தங்களின் வேலைகளைச் செய்யும் என்று அவர் கூறினார்.
சீனாவில் மனித இயந்திரங்களைத் தயாரிக்கும் துறை விரைவாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)