Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

6-ஆம் படிவத்தில் இணைவதற்கான முடிவை நாளை முதல் தெரிந்துகொள்ளலாம்

18/05/2025 02:44 PM

கோலாலம்பூர், 18 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டின் ஆறாம் படிவ முதல் தவணையில் இணையும் விண்ணப்பத்திற்கான முடிவை, sst6.moe.gov.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாகவோ அல்லது தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவோ நாளை, மே 19-ஆம் தேதி தொடங்கி மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

அதில் இணைவதற்கான வாய்ப்பை பெறாத மாணவர்கள் நாளை தொடங்கி மே 25-ஆம் தேதி வரையில் அதற்கான மேல்முறையீட்டை மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான முடிவை இதே செயல்முறையின் மூலம் ஜூன் மூன்றாம் தேதி தெரிந்துகொள்ளலாம் என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு தொடங்கி, உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து பொதுப் பல்கலைக்கழகங்களில் ஆறாம் படிவக் கல்வித் திட்டத்தையும் கல்வி அமைச்சு செயல்படுத்தவுள்ளது.

இது, மலேசிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என இரு துறைகளில் அவ்வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

எனவே, இவ்வாண்டு ஆறாம் படிவத்தில் இணையவிருக்கும் 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வை எழுதிய தகுதிப் பெற்ற மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் ஆறாம் படிவக் கல்வித் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மே 19 தொடங்கி 25-ஆம் தேதி வரை அவ்விண்ணப்பத்தை மேற்கொண்டு அதற்கான முடிவை https://sst6.moe.gov.my/ எனும் அகப்பக்கத்தில் ஜூன் மூன்றாம் தேதி தெரிந்துகொள்ளலாம்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]