புத்ராஜெயா, 13 மே (பெர்னாமா) -- கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் தோல்வியடைந்தால், அது தலைவர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரிக்கப்படுவதன் தோற்றத்தை ஏற்படுத்தும் எனும் கூற்றை, நம்பிக்கைக் கூட்டணி தலைமைச் செயலாளர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
நூருல் இசாவிற்கும் நடப்பு துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லிக்கும் இடையே அப்பதவிக்கான போட்டியே தவிர அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தேர்தலை ஒற்றுமை உணர்வுடன் எதிர்கொள்வதோடு, உட்கட்சிப் பூசலைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், இது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதோடு, இறுதியில் தேர்தலுக்குப் பிந்தைய பணிகளையும் தடுக்கும் என்று உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)