கோலாலம்பூர், 13 மே (பெர்னாமா) -- இன்று காலை, தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லம்பாமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சேமப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அன்வார் கூறினார்.
மேலும், அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இன்று காலை நிகழ்ந்த விபத்தில் பலியான சேமப் படை உறுப்பினர்களின் குடும்பத்தினருக்குத் தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபஹ்மி பட்சில் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இச்சம்பவம், குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதுகாப்புப் பணியாளர்களின் சேவை மற்றும் தியாகங்களை மதிக்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பு என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)