தெலுக் இந்தான், 13 மே (பெர்னாமா) -- தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லம்பானில், அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்மின், FRU எனப்படும் சேமப் படை லாரி, கற்கள் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் பலியான அனைவரும் ஈப்போ ஐந்தாவது பிரிவைச் சேர்ந்த சேமப் படை உறுப்பினர்கள் என்று ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி சைனால் அபிடின் கூறினார்.
உயிரிழந்த அனைவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பெர்னாமா தொடர்புக் கொண்டபோது, ஏசிபி டாக்டர் பக்ரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலை மணி 8.54 அளவில், தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்புக் கிடைத்ததைத் தொடர்ந்து தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் இயக்குநர் சையாணி சைடோன் கூறினார்.
இதனிடையே, இரு லாரிகளை உட்படுத்திய இச்சாலை விபத்தில் இருவர் சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)