Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு இந்தோனேசியா தேர்வு

30/04/2025 06:21 PM

சியாமென், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- சீனா, சியாமெனில் நடைபெறும் 2025 சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு, முன்னாள் வெற்றியாளரான இந்தோனேசியா தேர்வாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற D குழுவுக்கான ஆட்டத்தில், இந்தியாவுடன் களம் கண்ட இந்தோனேசியா
4-1 என்ற நிலையில் வெற்றி பெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் துருவ் கபிலா - தனிஷா க்ராஸ்டோ ஜோடி 10-21 21-18 21-19 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று தமது அணிக்கு முதல் புள்ளியை பெற்றுத் தந்தாலும், அடுத்து நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் இந்திய விளையாட்டாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான பி.வி சித்து மற்றும் எச்.எஸ். பிரான்னோ ஆகியோர் தோல்வியைத் தழுவி இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினர்.

நாளை நடைபெறும் ஆட்டத்தில், இந்தோனேசியா டென்மார்க்குடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)