இங்கிலாந்து, 28 ஏப்ரல் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை 20 முறை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் சாதனையை லிவர்பூல் சமன் செய்துள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய லிவர்பூல் 5-1 எனும் கோல் எண்ணிகையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை வீழ்த்தி தனக்கான கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த பருவம் நிறைவடைவதற்கு நான்கு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், 20-வது கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு லிவர்பூலுக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்டது.
ஆனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தபோது லிவர்பூல் அதிர்ச்சியடைந்தது.
அதனால், தனது ஆட்டத்தை வேகப்படுத்திய லிவர்பூல், பின்னர் வரிசையாக ஐந்து கோல்கள் அடித்து அதிரடி படைத்தது.
இந்த வெற்றியின் வழி, 34 ஆட்டங்களில் 82 புள்ளிகளைப் பெற்று லிவர்பூல் பட்டியலில் முதலிடம் பிடித்த வேளையில், 67 புள்ளிகளுடன் தற்போது ஆர்செனல் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
1980-ஆம் ஆண்டுகளில் காற்பந்து ஜாம்பவானாக இருந்த லிவர்பூல், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 20 கிண்ணதை உறுதி செய்து மீண்டும் முன்னணி கிளப் என்பதை நிரூபித்திருப்பதால், அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதனிடையே, வெம்ப்லி அரங்கில் நடைபெற்ற FA கிண்ண காற்பந்து போட்டியில், நாட்டிங்ஹாம் ஃபோரஸ் கிளப்பை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது மென்செஸ்டர் சிட்டி.
இந்த இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி ஆட்டத்தில் கிண்ணத்தைக் கைப்பற்றும் இலக்கை சிட்டி நெடுங்கியுள்ளது.
அதன் முதல் கோல் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் போடப்பட்ட வேளையில், இரண்டாவது கோல், இரண்டாம் பாதில் ஆட்டத்தின் 51-வது நிமிடம் அடிக்கப்பட்டது.
வரும் மே 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கிரிஸ்டல் பெலஸுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)