Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மலேசிய லீக்; வெற்றியை நிலைநாட்டியது ஜேடிதி

27/04/2025 06:55 PM

புக்கிட் ஜாலில், 27 ஏப்ரல் (பெர்னாமா) --   மலேசிய லீக் கிண்ணப் போட்டியில், ஶ்ரீ பஹாங்கை 2 -1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, ஜேடிதி தனது வெற்றியைத் தொடர்ந்து நிலைநாட்டியது.

Triple Treble அங்கீகாரத்தை பூர்த்தி செய்து ஜேடிதி உள்ளூர் காற்பந்து அரங்கில் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் 14ஆவது நிமிடத்தில், அலெக்சாண்டர் ஸ்வெட்கோவிக் தட்டிக் கொடுத்த பந்தை, ஶ்ரீ பகாங் அணியைச் சேர்ந்த T.சரவணன் கோலாக்கினார்.

பின்னர், செர்ஜியோ அகுவேரோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஶ்ரீ பகாங் அணி பத்து பேருடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கோலை சமன் செய்ய வேண்டிய அழுத்தத்தில் இருந்த ஜேடிதி அணி, இரண்டாவது பாதி ஆட்டத்தின், 54ஆவது நிமிடத்தில், பெர்க்சன் டா சில்வா மூலம் முதல் கோலைப் போட்டது.

அதைத் தொடர்ந்து, ஜேடிதிக்கு வழங்கப்பட்ட பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவ்வணியைச் சேர்ந்த அரிவ் ஐமான் ஹனாபி இரண்டாவது கோலைப் போட்டு ஶ்ரீ பகாங்கின் வெற்றி பெறும் கனவைக் கலைத்தார்.

ஒரே பருவத்தில் சூப்பர் லீக், ஃஏ கிண்ணம், மலேசிய கிண்ணம் ஆகிய மூன்று முக்கிய மலேசிய லீக் பட்டங்களை வென்ற ஜேடிதி Triple Treble புதிய ஊக்குவிப்பை அளித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் Double Treble அங்கீகாரத்தை கெடா வென்றிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)