தாப்பா, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்ற வேளையில், அனைத்து 19 வாக்களிப்பு மையங்களும் மூடப்பட்டுள்ளன.
தற்போது, வாக்குகள் எண்ணும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இன்றிரவு மணி 9 அளவில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை மணி 4 நிலவரப்படி, 54 விழுக்காட்டு வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருப்பதாக தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.
இதனிடையே, இன்று நடைபெற்ற வாக்களிப்பு, எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களின்றி, சுமூகமாக நடைபெற்றதாக பேராக் போலீஸ் தலைவர், டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கி, வாக்களிப்பு தினம் வரையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)