ஹுவா ஹின், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- தாய்லாந்து போலீஸ் படையின் இலகு ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐவர் மாண்டனர்.
இன்று காலை அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இவ்விபத்து ஏற்பட்டதாக போலீஸ் கூறியது.
ஹுவா ஹின் மாவட்டத்தில் வான்குடை பயிற்சி மேற்கொள்ள அந்த விமானம் வானில் பறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அந்த விமானம் கடலில் விழுந்தததால், அது இரண்டு பாகமாக உடைந்தது.
அந்த விமானத்தில் பயணித்த அறுவரில் ஐவர் உயிரிழந்த வேளையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)