பொது

ஊழலினால் கடந்த 5 ஆண்டுகளில் 27,000 கோடி ரிங்கிட் இழப்பு

07/05/2024 07:16 PM

புத்ராஜெயா, 07 மே (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊழல் குற்றங்களால், நாட்டிற்கு 27 ஆயிரத்து 700 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

2018-டில் இருந்து கடந்தாண்டு வரையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி-இன் ஒட்டுமொத்த தொகையின் அடிப்படையில் அந்த மதிப்பீடு செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு வியூகம், நாட்டில் அண்மைய ஊழலின் அபாயங்கள் வெளிப்படும் பகுதிகளை அடையாளம் காண பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்ட என்.ஏ.சி.எஸ் எனப்படும் தேசிய ஊழல் தடுப்பு வியூக உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)