உலகம்

'டொன் கோயோ' எரிமலை வெடிப்பினால் தீப்பிழம்புகள் சூழ்ந்தன

28/02/2024 09:16 PM

அல்த்சொமொனி , 28 பிப்ரவரி (பெர்னாமா) -- மெக்சிக்கோவில் உள்ள 'டொன் கோயோ' எரிமலை நேற்று தொடங்கி தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.

அத்தீப்பிழம்புகள் 77-க்கும் மேற்பட்ட நீராவி, வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றை வெளியேற்றுவதை மெக்சிகோவின் பேரிடர் தடுப்பு நிறுவனம், செனாப்பிரெட்டின் கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 2:42 மணிக்கு எரிமலை வெடித்ததில் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹுயெப்பன், தெதெலா டெல் வொல்கன், தெபெட்லிக்ஸ்பா மற்றும் இகாட்சிங்கோ பகுதிகளில் எரிமலையின் சாம்பல்கள் பரவி வருகின்றன.

கனமழை, சகதி மற்றும் மாசினால் அபாயம் ஏற்படும் என்பதால் எரிமலையில் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]