பொது

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று மகிழம்பூ தமிழ்ப்பள்ளி சாதனை

30/07/2023 08:10 PM

ஈப்போ, 30 ஜூலை (பெர்னாமா) -- அண்மையக் காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள், தொடர்ந்து நாடாளாவிய மற்றும் உலகளவில் அங்கீகரம் பெற்று வருவது பெருமையளிக்கைக்கூடிய ஒன்றாகும்.

தற்போது அந்த வரிசையில் பேராக், ஈப்போவைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

அப்பள்ளியைச் சேர்ந்த 109 மாணவர்கள் ஔவையின் 109 ஆத்திசூடிகளையும் அதன் பொருளையும் ஒப்பிவித்து அந்தப் பள்ளியின் பெயரை மலேசிய சாதனைப் புத்தகத்திம் இடம்பெறச் செய்துள்ளனர்.

மலேசியாவில் முதல் முறையாக ஔவையின் 109 ஆத்திச்சூடிளையும் அதன் பொருளையும், மகிழம்பூ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 109  மாணவர்கள் ஒரே மேடையில் ஒப்பிவித்துள்ளனர்.

'Amazing Malaysian Book of Record' இயக்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் காலை 9 மணி முதலே ஒவ்வொருவராக மேடை ஏறி ஆத்திச்சூடியை ஒப்புவிக்கத் தொடங்கினர்.

மாணவர்கள் இச்சாதனைப் புரிய மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்து கடந்த ஒரு வாரமாக அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வந்ததாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோகிலவாணி முனியாண்டி தெரிவித்தார்.

மாணவர்கள் இயல்பாகவே திறமையுள்ளவர்கள். 

அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர அனைத்து தரப்பினரின் ஊக்குவிப்பும் மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சாதனையில் இடம்பெற்ற 109 மாணவர்களுக்கும் 'Amazing Malaysian Book of Record' இயக்கத்தின் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதோடு, மலேசியாவில் முதல் தமிழ்ப்பள்ளி ஔவையின் 109 ஆத்திசூடிகளையும் அதன் பொருளையும் ஒப்பிவித்த விருதும் அப்பள்ளிக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)