GE15 NEWS   Tuan Ibrahim is opposition leader in Pahang State Assembly | 
பொது

இயக்குநர் வாரியத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

07/10/2022 09:41 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- இயக்குநர் வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்கத் தகுதி கொண்ட பெண்களின் எண்ணிக்கையையும் அரசாங்கம் உயர்த்தவிருக்கிறது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் பட்டியலிடப்பட்ட முக்கிய 100 பொது நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தில் 29 விழுக்காட்டினர் பெண்களாவர் என்று நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

அனைத்து 100 நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்திலும் குறைந்தது ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]