GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

நஜிப் வெளி தரப்பிடமிருந்து சொந்த மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் - கைரி

14/09/2022 09:02 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- சுகாதார அமைச்சு விநியோகிக்கும் மருந்தைப் பெற விருப்பமில்லையென்றால், டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் வெளி தரப்பிடமிருந்து சொந்த மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.

அந்தத் தகவல், நஜிப்பின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

“ஆனால், டத்தோ ஶ்ரீ நஜிப் சிறைச்சாலைக்கு தமது சொந்த மருந்துகளைக் கொண்டு வந்ததாக எனக்கு தெரிய வந்தது. அவர் தனது சொந்த மருந்தை கொண்டு வருவதில் எங்களுக்கும் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. அவர் அந்த மருந்தை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தமது சொந்த மருந்தைப் பயன்படுத்தலாம்,” என்றார் அவர்.

ஐ.எச்.எச் ஹெல்த்கேர் மலேசியாவிற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கைரி அவ்வாறு கூறினார்.

நஜிப்பின் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு அவர், வழக்கமாக பயன்படுத்தும் மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சிற்கு வழக்கறிஞர் டத்தோ சைட் இப்ராஹிம் வலியுறுத்தி இருந்ததற்கு விளக்கமளிக்கும்போது அவர் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கைதியிடம் வழங்குவதற்கு முன்னர், கைதியின் குடும்பத்தினர் வாங்கிய மருத்துகளை முன்னதாக சிறைச்சாலைத் தரப்பு பரிசோதிக்கும் என்ற விதிமுறையை தாம் சரிபார்த்ததை கைரி சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)