விளையாட்டு

காசிமிரோவை வாங்குவதில் மென்செஸ்டர் யுனைடெட் கிட்டத் தட்ட வெற்றி

19/08/2022 08:17 PM

ஸ்பெயின், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ரியல் மெட்ரிட் கிளப்பின் மத்திய திடல் ஆட்டக்காரர் காசிமிரோவை வாங்குவதில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கிட்டத் தட்ட வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரேசிலைச் சேர்ந்த காசிமிரோவை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் 6 கோடி பவுன்ட் தொகையை வழங்க முன் வந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன.

வாரம் ஒன்றுக்கு மூன்று லட்சத்து ஐம்பாதாயிரம் பவுன்ட் தொகையை சம்பளமாக வழங்கும் ஒப்பந்தத்தை காசிமிரோவுக்கு வழங்க மென்செஸ்டர் யுனைடெட் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தை காசிமிரோ ஏற்று கொள்ளும் பட்சத்தில் அவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய மென்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டில் ரியல் மாட்ரிட்டில் இணைந்த காசிமிரோ அந்த கிளப்புடன் 336 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அதோடு, கடந்த 9 ஆண்டுகளில் மூன்று ஸ்பெயின் லா லீகா பட்டம் ஐந்து சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும் வென்றிருக்கிறார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]