COVID–19 NEWS   COVID: Malaysia records increase in new cases, fatalities - Dr Noor Hisham | New COVID-19 cases drop 5.2 pct last week - Health Dg  | Witness still COVID-19 positive, Ahmad Zahid's corruption trial postponed | Japan's daily COVID cases top 180,000, set fresh record amid 7th wave | Canada approves first coronavirus vaccine for 6-month to 5-year-olds | 
பொது

வெள்ளத்தினால் 2,000-கும் மேற்பட்ட புத்தகங்கள் சேதம்

22/12/2021 08:41 PM

ஷா ஆலம், 22 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை நாட்டில் சிலப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இன்னும் சிலரின் நெஞ்சில், நீங்காத கசப்பான நினைவுகளை விட்டு சென்றுள்ளது.

அந்த பட்டியலில் இணைந்துள்ளார் ஶ்ரீ மூடாவில் வசித்து வரும், மலாய் இலக்கிய எழுத்தாளர் உதயசங்கர் எஸ்.பி. தம்முடைய வீட்டின் கீழ் மாடியில் இருந்த சிறிய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்ததாக அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

''வீட்டில் வெள்ளநீர் அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து புத்தகங்களும் காப்பற்றப்பட்டன. இந்த புத்தகங்களை காப்பற்ற பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தன,'' என்று அவர் கூறினார்.

புத்தகங்களை காப்பாற்ற பல முயற்சொகள் எடுத்தும், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக உதயசங்கர் கவலை தெரிவித்தார். கனமழை பெய்யும் போது தமது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் ஏற்படுவது அரிது என்பதால் இம்முறை தாம் எதார்த்தமாக இருந்து விட்டதாக உதயசங்கர் கூறினார்.

சுமார் இரண்டு நாட்கள் உதவிக்காக போரடிய நிலையில், திங்கட்கிழமை காலை எட்டு மணியளவில் தமது உறவினரால் அவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் காப்பற்றப்பட்டதாக உதயசங்கர் கூறினார்.

-- பெர்னாமா