கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் ஆறு மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பி.கே.பி. அமல்படுத்தப்பட்டு வரும் வேளையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் இவ்வுத்தரவை மீறும் எந்தவொரு தரப்பினரிடமும் போலீஸ் சமரசம் காணாது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி-யை மீறிய குற்றத்திற்காக அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நேற்று, புதன்கிழமை 389 பேரைக் கைது செய்திருப்பதைத் தொடர்ந்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
நேற்றுக் கைது செய்யப்பட்ட 389 பேரில் 371 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 18 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒப் பெந்தேங் சோதனை நடவடிக்கையின் வழி, 138 சட்டவிரோதக் குடியேறிகளும், அவர்களை அழைத்து வந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு, ஒரு படகும் 13 தரை போக்குவரத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று அனைத்துலக நுழைவாயில் வழியாக நாட்டிற்குத் திரும்பிய 505 பேர் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையே, பி.கே.பி. காலகட்டத்தின்போது சலவை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டுத் தர விதிமுறையைப் பின்பற்றுவதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உரிமையாளர்கள், ஊழியர்கள நியமிக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
-- பெர்னாமா
எங்களைப் பற்றி
Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com
பிரிவுகள்
• பொது
• அரசியல்
• உலகம்
• சிறப்புச் செய்தி
• விளையாட்டு
காப்புரிமை