Tuesday, 24 Nov 2020
22/11/2020 07:57 PM

ஈப்போ, 22 நவம்பர் (பெர்னாமா) -- பேராவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நிவாரண மையங்களில் தங்கி இருந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 6 மணி வரையில் 736-ஆக பதிவாகி இருந்த வேளையில் தற்போது 199-ஆக குறைந்திருக்கிறது.

இவ்வெள்ளத்தினால் லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மலேசிய பொது தற்காப்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, போலீஸ் மற்றும் ரேலா எனப்படும் தன்னார்வத் துறை உட்பட பல துறைகளின் ஒத்துழைப்பில் இந்த அனைத்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

மற்றொரு நிலவரத்தில், ஜோகூரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் அம்மாநிலத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், 40 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அம்மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலவரம் குறித்து கண்காணிப்பதோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவியை வழங்கி வருவதாக ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழு தலைவர் ஆர்.வித்யாநந்தன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க