Friday, 27 Nov 2020
அரசியல்
18/11/2020 05:52 PM

பேராக், 18 நவம்பர் (பெர்னாமா)  -- பேரா, கிரிக் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோ ஹஸ்புல்லா ஓஸ்மான் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி தற்போது காலியாக இருப்பதாக, தேர்தல் பொறுப்பாண்மைக் குழுவான எஸ்.பி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டம், பிரிவு 1, சட்டவிதி 54-க்கு ஏதுவாக, எஸ்.பி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டு 60 நாட்களுக்குள், அக்காலித் தொகுதி நிறப்பப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் டத்தோ அஜ்ஹார் அஜிஜான் ஹருன் கூறியிருக்கிறார்.

ஹஸ்புல்லா இம்மாதம் 16-ஆம் தேதி மரணமடைந்ததது குறித்து 18-ஆம் தேதி எஸ்.பி.ஆர் தலைவரிடம் அறிவிக்கப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி, டத்தோ அஜ்ஹார் அஜிஜான் குறிப்பிட்டார்.

அதோடு அவரின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் அஜ்ஹார் தெரிவித்துக் கொண்டார். மாரடைப்புக் காரணமாக, பினாங்கு, ரௌப் மருத்துவமனையில், ஹஸ்புல்லா மரணமடைந்தார்.

14-ஆவது பொதுத் தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட மொஹட் டஹாலன் இஸ்மாயிலையும் இப்ராஹிம் மொஹமாட் ஹனாஃபியாவையும் 5,528 வாக்குகள் பெறும்பாண்மையில் தோற்கடித்து, ஹஸ்புல்லா கிரிக் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க