Friday, 27 Nov 2020
14/11/2020 07:59 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- ஆலயங்களில் கமழும் பக்திமயம், இதயங்களில் பொங்கி வழியும் இன்பமயம், உள்ளங்கள் தோறும் ஆனந்தத் தாண்டவம், இல்லங்கள் எங்கும் பூத்துக் குலுங்கும் பேரின்பம்......

இத்தனை சிறப்பு அம்சங்களுடன் தொடங்கிய இன்றைய தீபத் திருநாளில் முத்தாய்ப்பாக, ஆலயங்களில் புதிய இயல்பில் வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

அந்த வகையில் கோலாலம்பூர், ஜாலான் புடு லாமாவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில், அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டுத் தர விதிமுறையான SOP-யைப் பின்பற்றித்  தீபாவளி பூஜைகள் நடத்தப்பட்டன. 

கோட்ர்டுமலை பிள்ளையார் கோவிலில் அதிகாலை 5.30 மணியளவில் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுமார் 6.45 மணியளவில் தீபாவளிப் பூஜைகள் தொடங்கப்பட்டன.

கொவிட் பெருந்தொற்றின் காரணமாக  இவ்வாண்டு  பக்தர்களின் வருகை மிதமான அளவிலேயே இருந்தாலும் அனைவரும் செயல்பாட்ட்டு தர விதிமுறையைப் பின்பற்றுவது திருப்தியளிப்பதாக அவ்வாலயத்தின் தலைமை குருக்கள் சிவநந்தம் பட்டர் கூறினார். 

மேலும், இவ்வாண்டு புதிய இயல்பில் கொண்டாடப்படும் தீபாவளி, தங்களுக்கு மாறுப்பட்ட அனுபவத்தையும் புதிவிதமான சவாலையும் ஏற்படுத்துவதாக  பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர்.

'' முன்பெல்லா ஒரே நேரத்தில் குடும்பதோடு வந்து ஆலயத்தில் வழிபட்டு செல்வோம். ஆனால் இன்றைய நிலையில் ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜை செய்ய முடியவில்லை, '' என்று ஜாலான் ஈப்போவைச் சேர்ந்த கிருஷ்ணன் சுந்தரம் , ஜோதி மீனாள் தம்பதியரும், கோலாலம்பூரைச் சேர்ந்த நரேஷ்ராம் திவ்யா ஆகியோர் தெரிவித்தனர். 

இதனிடையே, மிதமான அளவில் தீபாவளியைக் கொண்டாட அரசாங்கம் வாய்ப்பளித்தது பலருக்கு வருத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவை மக்களின் நலனுக்கானது என்றும் சிலர் கூறியிருக்கின்றனர். 

'' அரசாங்கம் நிர்ணயித்துள்ள செயல்பாட்டு தர விதிமுறையானது நமது நன்மைக்கே. எனவே, அதனை ஒருபோதும் நாம் குறை கூறாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் மிக விரைவில் இத்தொற்றிலிருந்து மீளலாம்,'' என்று கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் கதிரேசனும் டத்தோ ராஜேந்திரன், டத்தின் கலாமணி தம்பதியரும் தெரிவித்தனர். 


முன்னதாக, கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ஆலயத்தைச் சுற்றி அவ்வப்போது கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

பக்தர்களும் எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி அமைதியான முறையில் தங்களின் வழிபாடுகளை செய்துவிட்டுச் சென்றதைக் காண முடிந்தது.

காலையில் தொடங்கிய சிறப்பு வழிபாடு நண்பகல் 12.00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

--பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க