பொது

சுங்காய் சாலை விபத்தில் இருவர் பலி

18/10/2020 08:01 PM

சுங்காய், 18 அக்டோபர் (பெர்னாமா) -- பேரா, சுங்காய், ஜாலான் கம்போங் கிலா பாருவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு கார்களை உட்படுத்தி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகி இருக்கின்றனர்.

காலை 11.04 மணியளவில் பெரோடுவா மைவி மற்றும் புரோட்டோன் சாகா கார்களை உட்படுத்திய சாலை விபத்து குறித்த அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து பிடோர் மற்றும் சிலிம் ரிவர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.

த்ங்ஜோங் மாலிம், ஜாலான் கெத்தோயோங், ருமா அவாம் 2-யில் வசிக்கும் 64 வயதுடைய முஹமட் தாஹிர் ஜுனுஸ் மற்றும் 56 வயதுடைய நோர் ஐனி முஹமட் சாம் என்று அடையாளம் காணப்பட்ட இருவர் புரோட்டோன் சாகா ரக காரில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்திருக்கின்றனர்.

அதேவேளையில், மைவி கார் ஓட்டுனர் சிகிச்சைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

-- பெர்னாமா