செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், 21 ஜூன் (பெர்னாமா) -- உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கவலை தெரிவித்தார்.
அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் நிலையில் அவை உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.
அதிக மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வளர்ந்து வருவதாகவும் அவை உலக மக்களை நேரடியாக பாதிப்பதாகவும் விளாடிமிர் புதின் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு தேவைப்படுவதாக அவர் விவரித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் மேற்கொண்டாலும் ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைச் சுற்றி மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து தாம் கவலைப்படுவதாக அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற உலக பொருளாதார கருத்தரங்கில் புதின் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]