Friday, 25 Sep 2020
அரசியல்
16/09/2020 07:50 PM

செம்போர்னா, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- தேசிய கட்சிகளைவிட உள்ளூர் கட்சிகளையே வாக்காளர்கள் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

மாநிலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நெழிவு சுழிவுகள் மட்டுமின்றி, அனைத்து சட்டமன்றங்களில் உள்ள பெரும்பாலான விவகாரங்களை, உள்ளூர் கட்சிகளே அதிகம் அறிந்து வைத்திருப்பதாக, சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாஃபியி அப்டால் கருதுகின்றார். 

'' அவை முக்கியமானவைதான். இருப்பினும், இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் உள்ளூர் கட்சிகளுக்கு எதிர்ப்பாக இருந்தாலும், எதிர்காலத்தில் நாம் காணும் மலேசிய நாட்டின் திசையையும் வண்ணமயமாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இங்கு இன வேறுபாடு என்பது மலேசியாவை வலுப்பெறச் செய்வதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.'' என்றார் அவர்.

சபா மாநில தேர்தலில் உள்ள அனைத்து சட்டமன்றங்களும் மும்முனைக்கும் மேற்பட்ட போட்டிகளையே சந்திக்கவிருக்கின்றன. 

அம்மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின்போதும், இது வழக்கமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். 

அண்மையில், சபா, செம்போர்னாவில் பெர்னாமாவிற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில் முஹமட் ஷாஃபியி இவ்வாறு கூறினார். 

வாரிசான் கட்சி தலைவருமான முஹமட் ஷாஃபியி, உஸ்னோ, சபா சிந்தா கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் சபா மக்கள் ஒற்றுமை கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து, செனாலாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க