Thursday, 06 Aug 2020
அரசியல்
01/08/2020 06:55 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பெரிக்காத்தான் நேஷனல் (PERIKATAN NASIONAL) கூட்டணியில் அம்னோ இடம் பெறாது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிட் தெரிவித்திருக்கும் கூற்று தற்போதயை அரசாங்கத்தை பாதிக்காது. 

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை வழி நடத்தும் டான் ஶ்ரீ முகிடின் யாசின்   தலைமைத்துவத்திற்கு அம்னோ தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அனைத்துலக வாணிப மற்றும் தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி  தெரிவித்திருந்தார்.

''முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்று வரை இருக்கும் ஒத்துழைப்பைப் பேண வேண்டும். பிப்ரவரி முதல் நாங்கள் அமைத்த இந்த கூட்டணியால், பல வெற்றிகளை நாங்கள் பெற்றுள்ளோம்'', என்றார் அஸ்மின் அலி. 

சனிக்கிழமை நெகெரி செம்பிலான், கோலா பிலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஸ்மின் அலி இவ்வாறு கூறினார். 

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதால்  நாட்டில் ஏற்படும் அரசியல் தொடர்பான பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

''இன்று நாம் மக்களின் சுகாதார பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளோம். மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதால் இதை அரசியலாக்க வேண்டாம். பிரதமரின் குறிக்கோளும் இதுதான். அவர் அரசியல் குறித்து அரிதாகவே குறிப்பிடுகிறார். ஏனென்றால் கொவிட்-19 நோய் தாக்கத்திலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதும் மக்களைக் காப்பாற்றுவதும் தான் அவருடைய நோக்கம்'', என்றும் அஸ்மின் குறிப்பிட்டார் 

பெர்சத்து, அம்னோ, பாஸ் உட்பட தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளுடன் செயல்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு, சரவாக் கூட்டணி கட்சி ஆதரவு வழங்கி வருகிறது. 

- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க