Thursday, 02 Jul 2020
பொது
30/06/2020 08:01 PM

புத்ராஜெயா, 30 ஜூன் (பெர்னாமா) -- கெடா, டுரியான் புரோங்கிலும் பெர்லிஸ், பாடாங் பெசாரிலும் இருக்கும் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு மையம், ICQS மீண்டும் திறப்பதற்கு, நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவு, பிகேபி அமலாக்கம் தொடர்பான அமைச்சர்களுடான சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 

வர்த்தக வாகனங்கள் மற்றும் கொள்கல லாரிகளுக்கு மட்டுமே அது திறக்கப்படவிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

இதன் தொடர் நடவடிக்கைகாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம், இம்முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்று இன்று செவ்வாய்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார். 

அதேவேளையில், சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கு, மலேசிய உயர் ஆணையத்திடமிருந்து MYPASS பெர்மிட்டுக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். 

இதனிடையே, நேற்று, திங்கட்கிழமை நாடு திரும்பிய 456 மலேசியர்களில் 161 பேர் ஜோகூர் எல்லைப்பகுதி வாயிலாக நாடு திரும்பியவர்களாவர். 

அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே கட்டாயத் தனிமைப்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

மற்றொரு நிலவரத்தில், நேற்று திங்கட்கிழமை மட்டும் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, PKPP-யை மீறியதற்காக 39 பேர் கைதுச் செய்யப்பட்டனர். 

அதில், மூவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 36 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார். 

சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை ஒடுக்கும் முயற்சியாக, நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 67 OP BENTENG சாலை தடுப்பு நடவடிக்கைகளில் 40,527 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

சபா, மலாக்கா, திரெங்கானு உட்பட 9 மாநிலங்களில் இருக்கும் 23 மண்டலப் பகுதிகளில் 28 கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

மலேசிய கட்டுமானத் தொழிற்துறை மேம்பாட்டு வாரியமான சிஐடிபி நாடு முழுவதிலும் உள்ள 74 கட்டுமான பகுதிகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. 

அவற்றில் 61 கட்டுமான தளங்கள் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றுவதாகவும், அதனை முறையாக பின்பற்றாத ஐந்து கட்டுமானப் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க