Thursday, 02 Jul 2020
பொது
30/06/2020 06:19 PM

சினி, 30 ஜூன் (பெர்னாமா) -- சினி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, இதுவரை விண்ணப்பிக்கப்பட்ட 121 பிரச்சார பெர்மிட்டுகளில் 117 பெர்மிட்களை போலீசார் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

அதில், நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றாத காரணத்தினால் நான்கு பிரச்சார பெர்மிட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பகாங் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ஜாலில் ஹசான் தெரிவித்திருக்கிறார். 

அனுமதி வழங்கப்படாததற்கு காரணம், உதாரணமாக அவர்கள் 250-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தவிருக்கின்றனர். இரண்டாவது, எஸ்.ஓ.பி.-யை பின்பற்றாத சாத்தியம் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். அந்த இடம் சிறியதாக இருக்கும்; அந்த மண்டபம் சிறியதாக இருக்கும். ஆனால், அதிகமானோர் வருகைப் புரிவர். எனவே, போலீசார் ஆய்வு மேற்கொண்டு அதைத் தொடர அனுமதிக்கவில்லை. 

சினி இடைத்தேர்தல் தொடர்பாக தங்கள் தரப்பு இதுவரை இரண்டு போலீஸ் புகார்களைப் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். 

வேட்புமனு தாக்கல் தினத்தன்று, நான்கு சக்கர வாகனம் ஒன்றைப் பின்தொடர்ந்து 15 மோட்டார் சைக்கிள்கள் பேரணி நடத்தியது தொடர்பாக இரண்டு புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. 

அதோடு, தமது புகைப்படத்தை, கெஅடிலான் கட்சி வேட்பாளரின் புகைப்படத்திற்கு மாற்றியமைத்த மற்றொரு சம்பவம் தொடர்பாகவும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். 

செவ்வாய்க்கிழமை, சினி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பை பார்வையிட்ட பின்னர் அப்துல் ஜாலில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க