பொது

சட்டவிரோதக் குடியேறிகள் கைது

13/06/2020 08:08 PM

புத்ராஜெயா, 13 ஜூன் (பெர்னாமா) -- மே ஒன்றாம் தேதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரையில், 723 சட்டவிரோதக் குடியேறிகளையும், சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்டு வரும் 138 முகவர்களையும் போலீசார் கைதுச் செய்திருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கிறார். 

அதே வேளையில், கள்ளக் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 பேரையும், 15 கப்பல்களையும் போலீசார் தடுத்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

நாட்டிற்கு நுழைய முயற்சித்த 164 சட்டவிரோதக் குடியேறிகள், 6 முகவர்கள் மற்றும் 27 கப்பல்களை, OP BENTENG மூலம், திரும்ப அனுப்பப்பட்டிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார். 

கொவிட்-19 பரவவைக் கட்டுப்படுத்துவதுடன், எல்லைப் பகுதியில் நிகழும் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காகவும் ராணுவ படை, போலீஸ் , மலேசிய கடல் அமலாக்க நிறுவனம், மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து OP BENTENG நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

-- பெர்னாமா