Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 06:17 PM

ரோம், 26 மார்ச் [பெர்னாமா] -- உலகளவில், இன்று காலை வரையில், மொத்தம் நான்கு லட்சத்து 13 ஆயிரத்து 467 கொடிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இந்நோய்க் கிருமி தற்போது மொத்தம்196 நாடுகளில் பரவியிருக்கும் வேளையில், உலகம் முழுமையிலும் இதுவரையில் 18 ஆயிரத்து 433 பேர் பலியாகி இருப்பதாக, உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சீனாவுக்கு வெளியில், மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 619 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

196 நாடுகளில், இத்தாலிதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் மரண ஓலங்கள் விண்ணை முட்டிக் கொண்டிருக்கின்றன.

இறந்தவர்களைப் புகைப்பதற்கு இடங்கள்கூடப் போதவில்லை என்று கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் அதிக மரணங்கள் இத்தாலியில் ஏற்பட்டு வருகின்றன.

இத்தாலியில் இதுவரையில், 7,503 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 386 ஆகும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐயாயிரம் பேர் இந்நோய்க் கிருமிக்கு ஆளாகி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
  
இத்தாலியை அடுத்து ஸ்பெயின் நாட்டிலும் கொவிட்-19 நோய்த் தாண்டவம் ஆடி வருகிறது.

அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 738 பேர் மரணமடைந்திருக்கும் அதிர்ச்சித் தகவலை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இவ்விரு நாடுகளைத் தவிர்த்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் இந்நோய்க் கிருமி கடுமையாகத் தாக்கி வருவதாக அது தெரிவித்தது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க