கொவிட்-19 நோய் எதிரொலி, சீனாவில் நடைபெறவிருந்த எஃப் ஓன் கார் பந்தயப் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது.

 
 
 

ஷாங்ஹாய், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- வேகமாக பரவி வரும் கொவிட்-19 நோய் காரணமாக அனைத்துலக விளையாட்டு போட்டிகள் அடுத்து அடுத்து ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன. 

அவ்வகையில், சீனா, ஷாங்ஹாயில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த எஃப் ஓன் கார் பந்தயத்தை, ஒத்தி வைப்பதாக, அதன் ஏற்பாட்டுக் குழு நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 

இப்போட்டி மீண்டும் நடத்தப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அக்குழு கூறியது. 

இப்போட்டியில் பங்கு கொள்ளும், ஊழியர்கள், போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ஏற்பாட்டு குழு  தெரிவித்தது.  -- பெர்னாமா 

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்