Ad Banner
Ad Banner
 பொது

க்ளோக் வகை துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கு ஏ.கே.பி.எஸ் பரிந்துரை

01/07/2026 04:18 PM

புத்ராஜெயா, 01 ஜூலை (பெர்னாமா) -- க்ளோக் வகை துப்பாக்கிகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் காரணமாக அவற்றைக் கொள்முதல் செய்வதற்கு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், ஏ.கே.பி.எஸ் பரிந்துரைக்கிறது.

வேலையில் ஈடுபடும்போது பணிகளை எளிதாக்கவும், பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தவும், ஏ.கே.பி.எஸ்-க்கு சுடும் ஆயுதங்களை வழங்க அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக ஏ.கே.பி.எஸ் தலைமை இயக்குநர், டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.

''பராமரிக்க எளிதாகவும், அதிக பராமரிப்புச் செலவு இல்லாததாகவும் இருக்கும் ஒன்றை நாங்கள் விரும்புகிறோம். அனைவருக்கும் தெரிந்தபடி, நாம் வழக்கமாக பயன்படுத்தும் துப்பாக்கி க்ளாக் வகையைச் சேர்ந்தது. குறைந்த பராமரிப்பு மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில், ஏ.கே.பி.எஸ்-இன் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் சுஹாய்லி அவ்வாறு கூறினார்.

முன்னதாக, ஏ.கே.பி.எஸ்-க்கு துப்பாக்கிகள் மற்றும் அதற்கேற்ற உபகரணங்களை ஏற்பாடு செய்வதற்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)