கானா, 30 ஜூன் (பெர்னாமா) -- அக்ரா எனும் நகரில் திங்கட்கிழமை தொடங்கி பெய்து வரும் கனமழை காரணமாக, அலாஜோ குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
வெள்ள நீர் சூழ்ந்ததால் குடியிருப்பாளர்கள் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தங்களின் வீட்டின் கூரைகள் மீது ஏறி தஞ்சமடைந்தனர்.
மேலும் சிலர் பாதுகாப்பிற்காக உயரமான இடங்களிலும், கட்டிடங்களின் மேல் தளங்களிலும் தங்கியுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெள்ளம் சூழ்ந்த சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கானா அதிபர் ஜான் மஹாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அந்நாட்டு அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)