Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2025 எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

18/06/2026 05:41 PM

செலாயாங், ஜூன் 18 (பெர்னாமா) -- உள்நாட்டு பொது பல்கலைக்கழகங்களில், கல்வி துறையில் மேற்கல்வியைத் தொடர, 2025ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறப்புச் தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு கல்வி அமைச்சு உபகாரச் சம்பளம் வழங்கவுள்ளது.

ஆறாம் படிவ மாணவர்களின் கல்வி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஊக்குவிக்கவும், பல்கலைக்கழக அளவில் கல்வியை வலுப்படுத்தவும் அமைச்சு மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் அடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

“எனவே, அமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை வகுப்பதற்கு நமக்குத் தொடர்ந்து உதவக்கூடிய சிறந்த முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக, பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மேம்பாடு, உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஆறாம் படிவம் மற்றும் மெட்ரிகுலேஷன் முதல் தொடங்குகிறது,” என்றார் அவர்.

இன்று, 2025 எஸ்.டி.பி.எம்  தேர்வு, மலேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி தேர்வு MUET மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மலாய்மொழி தேர்ச்சி சான்றிதழ், SKBMW ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனை கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)