Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஜோகூர் பி.எச் வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்

18/06/2026 04:41 PM

ஜோகூர் பாரு, 18 ஜூன் (பெர்னாமா) --  ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை நம்பிக்கை கூட்டணி பி.எச் வரும் திங்கட்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட கட்சியின் இதர உயர்மட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் விழாவில் அதன் அறிவிப்பு வெளியிடப்படாம் என்று ஜோகூர் பி.கே.ஆர்-ரின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.

தயார் செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை மாநில மற்றும் மத்திய நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சலிஹா கூறினார்.

சம்பந்த இந்த அறிவிப்பு ஒருவேளை ஜோகூர் வடப் பகுதியான புக்கிட் கம்பீர் தங்காக்கில் வெளியிடப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் நானிங் உள்ளிட்ட வட மண்டலத்தில் நடத்தப்பட்ட தொடர் நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மக்களிடமிருந்து பெருகி வரும் ஆதரவு அலைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சமூகத்தின் தேவைகளை உண்மையாகப் புரிந்துகொண்டவர்களா என்பதுடன் சிறந்த சேவைக்கான பதிவையும் அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக, வேட்பாளர் தேர்வு செயல்முறையில் கிளை அளவிலான கருத்துகளும் இடம்பெறும் என டாக்டர் சலிஹா விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)