Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெரிக்காத்தானில் மறுசீரமைப்பு

18/06/2026 04:00 PM

கோலாலம்பூர், 18 ஜூன் (பெர்னாமா) --  பெர்சாத்துவின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி முஹமட் ஜிடின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி ஆகியோரின் சேவைகளை உடனடியாக நிறுத்துவதன் மூலம் கட்சியின் நிர்வாகத்தை மறுசீரமைப்பதாக பெரிக்காத்தான் நேஷனல், பி.என், இன்று அறிவித்துள்ளது.

மிக விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் - நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களுக்கான முன்தயாரிப்பு நடவடிக்கையாக இந்த மறுசீரமைப்பு உள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பி.என் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றிருந்த முஹமட் ரட்சிக்கு பதிலாக, தற்போது அப்பொறுப்பினைக் கெடா மாநில மந்திரி புசாரும் பாஸ் கட்சியின் தேர்தல் தலைமை இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் ஏற்கவிருப்பதாக டாக்டர் அஹ்மட் ஷம்சூரி கூறினார்.

மேலும், முன்னதாக டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி ஏற்றிருந்த பி.என் பொருளாளர் பொறுப்பினை இனி, மலேசிய இந்திய மக்கள் கட்சியான எம்.ஐ.பி.பி-யின் துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியம் ஏற்கவிருப்பதாவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் அரசியலமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் துணைப் பொதுச் செயலாளராக டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)