Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தானில் கடுமையான வெப்ப அலை

14/06/2026 05:29 PM

சிந்து, 14 ஜூன் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் சில முக்கிய நகரங்களில் கடுமையான வெப்ப அலை வீசுவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, ஜாகோபாபாட் நகரில் வெப்பநிலை 48.0 பாகை செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

ஜூன் 7 முதல் 12-ஆம் தேதி வரை வெப்ப அலை ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உலகின் வெப்பமான நகரங்களில் ஒன்றான ஜாகோபாபாட்டில், வெப்பத்தைக் கையாள அதிகாரிகள் குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெப்பத் தாக்கத்தைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் இல்லாததாலும், இலவசக் குடிநீர் வசதி இல்லாததாலும், மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ஜூன் 13-ஆம் தேதி வெப்ப அலை தணியும் என்றும், பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)