Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது

10/06/2026 03:30 PM

ஜெர்தே, 10 ஜூன் (பெர்னாமா) --  நேற்று மாலை, இரு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று, திரெங்கானு, ஜாலான் ஜெர்தே-பாசிர் அகாரில் உள்ள கம்போங் செராங் மெலிலிங்கில் விபத்துக்குள்ளானது.

சாலை விபத்தில் காயமடைந்த இரு ஆடவர்களை ஏற்றிக் கொண்டு, பெசூட் மருத்துவமனைக்குச் சென்றுக் கொண்டிருக்கும் வழியில் மாலை சுமார் 5 மணிக்கு இச்சாலை விபத்து நிகழ்ந்ததாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ரொசைமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

சாலையின் ஓரத்தில் இருந்து வலது பக்கம் திரும்பிய MPV ரக வாகனம் ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, முஹமட் ரொசைமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

விபத்தின் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையின் இடதுபுற ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் ஒன்றின் மீது மோதியதுடன், சம்பந்தப்பட்ட வாகனம் கால்வாயில் விழுந்ததாக அவர் கூறினார்.

நோயாளிகள் உட்பட விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

நோயாளிகள் இருவரும் மற்றொரு ஆம்புலன்ஸின் மூலம் தொடர் சிகிச்சைக்காக பெசூட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக முஹமட் ரொசைமி கூறினார்.

1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 43(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)