டெக்சஸ், 09 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில், அர்ஜென்டினா காற்பந்து அணி, அமெரிக்காவின் டெக்சசில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இன்று நடைபெறவிருக்கும் நட்புமுறை ஆட்டத்தில், அர்ஜென்டினா, ஐஸ்லாந்துடன் மோதவுள்ளது.
இந்த பயிற்சியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சியும் கலந்து கொண்டார்.
உலகக் கிண்ண தயார் நிலையாக நடைபெற்ற ஒரு நட்பு முறை ஆட்டத்தில், கடந்த சனிக்கிழமை அர்ஜென்டினா ஹோண்டுராசுடன் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜூன் 16-ஆம் தேதி நடைபெவிருக்கும் தனது தொடக்க ஆட்டத்தில், அர்ஜென்டினா அல்ஜீரியாவுடன் களம் காணவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)