புக்கிட் கியாரா, 09 ஜூன் (பெர்னாமா) -- ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக, மலேசிய அணிக்கு நன்மை பயக்கும் வகையில் எந்தவொரு விளையாட்டாளருடன் ஜோடி சேரத் தாம் தயாராக இருப்பதாக தேசிய ஆடவர் இரட்டையர் பூப்பந்து விளையாட்டாளர் தீ காய் வுன் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு விதமான ஆட்ட பாணியைக் கொண்ட தம்மால் எந்தவொரு விளையாட்டாளருடனும் ஒத்துப்போக முடியும் என்று அவர் கூறுகிறார்.
''என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு பன்முகத் திறமையாளர். அதனால், யாருக்காகவும், என்னையும் என் சகாவையும் நான் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். அதன் மூலம், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடியும். எனவே, இது ஒரு புதிய சவால் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் அவர்.
மேலும், புதிய கூட்டணிகளை முயற்சிப்பது ஒரு சரியான நடவடிக்கை என்றும் அனைவரின் முக்கிய இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை வெல்லுவதாகும் என்றும், 26 வயதான தீ காய் வுன் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான நீண்ட காலத் திட்டமிடலின் ஒரு பகுதியாக, நாட்டின் தலைசிறந்த இரட்டையர் பூப்பந்து ஆட்டக்காரர்களை உள்ளடக்கி புதிய கூட்டணிகளை உருவாக்க மலேசிய பூப்பந்து சங்கம் எடுத்த முடிவு குறித்த அவர் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)