Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எந்தவோர் இனத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அரசாங்கத்தில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்படக்கூடாது

08/06/2026 04:28 PM

புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) --  ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு இணங்க, எந்தவோர் இனத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அரசாங்கத்தில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், அரசாங்கத்தில் பல்வேறு இனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புக்கு இடமளிப்பதன் மூலம் மலேசியாவின் பன்முகத்தன்மைப் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

''அரசாங்கத்திலோ அல்லது அமைச்சிலோ, பெரும்பான்மையினர் மலாய்க்காரர்களாக இருந்தாலும் கூட, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும். இந்தத் தெளிவான கொள்கைகள் மறுக்கப்படவில்லை. இரண்டாவதாக, ஒரு ஜனநாயக நடைமுறை அமைப்பில் நாம் மக்களின் தேர்வுகளை மதிக்க வேண்டும். எனவே, அரசாங்கத்தின் கொள்கைகளில் பங்கேற்பதற்கும் ஒன்றிணைவதற்கும் எந்தவோர் இனம் அல்லது கட்சியின் உரிமைகளையும் மறுக்கும் முடிவை நாம் எடுப்பது மிகவும் ஆணவமான அல்லது மரியாதையற்ற செயலாகும்'', என்றார் அவர்.

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடிய இனவாதத்தையோ அல்லது சொல்லாடலையோ தூண்டுவதற்கு அரசியல் வேறுபாடுகளைக் காரணம் காட்டக்கூடாது என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)