இங்கிலாந்து, 05 ஜூன் (பெர்னாமா) -- இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான லிவர்பூலின் புதிய நிர்வாகியாக அண்டோனி இராயோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அப்பொறுப்பில் இருந்த ஆர்னே ஸ்லாட் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு வார காலத்தில் அண்டோனி இராயோலா அவ்வணிக்கு தற்போது புதிய தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியைத் லிவர்பூல் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் உறுதிப்படுத்தியது,
ஆனால், அண்டோனி இராயோலாவின் ஒப்பந்தக் கால கட்டம் குறித்து அதில் குறிப்பிடபடவில்லை.
43 வயதான அவரின் பயிற்சித் திறமை, கடந்த பருவத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த சிரமப்பட்ட லிவர்பூல் அணிக்கு புத்துயிர் ஊட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் கடந்த பருவத்தில் லிவர்பூல் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் காரணமாக அக்குழுவின் நிர்வாகமும் ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதன் எதிரொலியாக லிவர்பூலின் நிர்வாகியாக இருந்த ஆர்னே ஸ்லாட் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
லிவர்பூல் குழுவின் நிர்வாகியாகப் பதவி ஏற்றதை அடுத்து, முதல் பருவத்திலேயே அக்குழுவுக்குப் பிரிமியர் லீக் பட்டத்தைப் பெற்றுத்தந்த அவர் அண்மையில் நடந்து முடிந்த பருவத்தில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)