Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பயோடீசலின் பயன்பாடு; டீசல் விநியோகப் பாதுகாப்பை வலுப்படுத்து முக்கிய மாற்று வழி

03/06/2026 05:17 PM

புத்ராஜெயா, ஜூன் 03 (பெர்னாமா) -- செம்பனை எண்ணெய் அடிப்படையிலான பயோடீசலின் பயன்பாடு நாட்டின் நிலைத்தன்மை செயல்திட்டத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, நெருக்கடி ஏற்படும்போது டீசல் விநியோகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய மாற்று வழியாகவும் அமைகிறது.

பெட்ரோலிய டீசல் விநியோகத்தில் தடை ஏற்பட்டால், நாட்டிற்கு மாற்று எரிபொருள் ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதே, B15 வரையிலான பயோ டீசல் கலவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் பரிந்துரைக்கான முக்கிய நோக்கம் என்று தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் தெரிவித்தார்.

"இந்த பயோ டீசல் மக்களுக்கு ஒரு விரிவாக்க அல்லது எண்ணெய் மூலமாகும். குறிப்பாக, ஈ.எஸ்.ஜி மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை நோக்கிய எங்களின் பயணத்தில், பயோ டீசலின் பயன்பாட்டை நாங்கள் பெரிதும் ஊக்குவிக்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று, biodiesel B15  திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கிள்ளான் பள்ளத்தாக்கு விநியோக முனையத்தை  ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

நெருக்கடியின் போது விநியோக உத்தரவாதங்களை நீட்டிப்பதற்காக ஜூன் 1ஆம் தேதி முதல் B15 திட்டத்தை அமல்படுத்துவது அரசாங்கத்தின் முடிவு என்றும், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை நீட்டிக்க உதவுவதால் Palm Methyl Ester , PME ஒரு நல்ல மாற்று வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)