Ad Banner
Ad Banner
 பொது

சாலை விபத்தில் பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

03/06/2026 03:57 PM

செரியான், ஜூன் 03 (பெர்னாமா) -- இன்று காலை சரவாக், செரியானில் உள்ள ஜாலான் பாக்கி லாமா - எங்செங்காய் சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.

இவ்விபத்து குறித்து, காலை மணி 8.41-க்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது.

அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயை மோதியதாக அறிக்கையொன்றின் வழி சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறியது.

இச்சம்பவத்தில் ஒரு பெரியவர், மூன்று பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உயிரிழந்ததாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.

அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர், வாகனத்தில் சிக்கியிருந்த நால்வரின் உடல்களை  வெளியேற்றினர்.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகே பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலம், விபத்தின்போது வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தை சுகாதார அமைச்சின் பணியாளர் உறுதிப்படுத்தினார்.

மேல் நடவடிகைக்காக அவர்கள் அனைவரின் உடல்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)