Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மக்கள் பாரம்பரியம் & கலாச்சார பன்முகத்தன்மையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்

30/05/2026 05:33 PM

கோலாலம்பூர் , 30 மே (பெர்னாமா) --  மலேசியா மடானி என்ற உணர்வோடு மக்கள் தங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதோடு, சகோதரத்துவப் பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

இன்றும் நாளையும், இரு தினங்களுக்குக் கடாசான் மக்களால் கொண்டாடப்படும் Pesta Kaamatan மற்றும் காவாய் திருநாள், குடும்ப உணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, மக்களிடையே மகிழ்ச்சி, இறையருள் மற்றும் நன்றியுணர்வையும் கொண்டுவரும் என்று தாம் நம்புவதாக, இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டிருந்தார்.

அறுவடை காலம் முடிந்த பிறகு, விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சபாவில் உள்ள கடாசான்-டூசுன், முருட் மற்றும் ருங்கு ஆகிய சமூகத்தினர் இன்றும் நாளையும் Kaamatan திருநாளை கொண்டாடுகின்றனர்.

அதேவேளையில், சரவாக்கில் உள்ள டயாக் சமூகத்தினர் ஜூன் முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் இரு தினங்களுக்கு காவாய் திருநாளை கொண்டாடுவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)