மெக்கா, 27 மே (பெர்னாமா) -- சவூதி அரேபிய நகரமான மெக்காவில் முஸ்லிம் யாத்ரீகர்கள் இன்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றினர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த யாத்திரைக்காக 15 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்நகரத்திற்கு வருகைப் புரிந்துள்ளனர்.
ஹஜ்ஜின் போது யாத்ரீகர்கள் மெக்காவின் பெரிய மசூதியில் உள்ள கருப்புக் கனசதுரமான காபாவை ஏழு முறை வலம் வரும் ‘தவாஃப்’ சடங்கைச் செய்கின்றனர்.
ஹஜ் யாத்திரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அனுசரிக்கும் சடங்காகும்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வட்டார பதற்றங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு புனிதப் பயணம் நடைபெறுகிறது.
மற்றொரு நிலவரத்தில், இந்தோனேசியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று பள்ளிவாசல்களில் கூடி, கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு தியாகத் திருநாளைக் கொண்டாடினர்.
இந்நிலையில், தொழுகையில் கலந்து கொண்ட பலர் மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
அதோடு, பொருளாதார நெருக்கடியும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையும் இவ்வாண்டு திருநாளை மிதமாக கொண்டாட வைத்ததாகவும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தானிலும் இன்று தியாகத் திருநாள் கொண்டாடப்பட்டது.
இறைவனின் கட்டளையை ஏற்று தனது மகனை தியாகம் செய்ய முன்வந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அப்பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.
அதிகாலை சிறப்புத் தொழுகையில் மக்கள் திரளாகக் கலந்துக் கொண்டு தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை தியாகம் கொடுத்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)