மோங்ப்வாலு, மே 26 (பெர்னாமா) -- கிழக்கு காங்கோவின் மோங்ப்வாலு நகரில், எபோலா நோய்ப் பரவலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த சுகாதாரப் பணியாளர்கள், அந்நோயால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் உடலை நெகிழியால் மூடி சவப்பெட்டியில் வைக்கின்றனர்.
இந்த நடைமுறை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்வதைத் தொடர அனுமதிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.
Mongwalu-வில் உள்ள எபோலா தடுப்பு மையங்கள் மீது வெள்ளிக்கிழமையும், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவிலும் தனிமைப்படுத்தும் கூடாரங்கள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று கண்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை நேரடியாகக் கையாள்வதன் மூலம் எபோலா பரவக்கூடும் என்பதால், சடலங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது இன்றியமையாததாக உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, மோங்ப்வாலுவில் உள்ள ஒரு மருத்துவமனையில், அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த சனிக்கிழமை எபோலா தனிமைப்படுத்தல் கூடாரங்களை எரித்தனர்.
இதற்கு முந்தைய நாள் இரவு நடந்த இதேபோன்ற தாக்குதலில், எபோலா நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் 18 பேர் மக்கள் மத்தியில் தப்பிச் சென்றதை அடுத்து, இச்சம்பவம் நிகழ்ந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் சிக்கலாகியுள்ளன.
மற்றொரு நிலவரத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவிவரும் எபோலா நோய்த்தொற்று, தடுப்பு நடவடிக்கைகளை மிஞ்சிவிட்டதாகவும், சந்தேகிக்கப்படும் இறப்புகளின் சமீபத்திய எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் திங்கட்கிழமை தெரிவித்தார்.
அதோடு, எபோலா நோயாளிகளைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பதிலளிப்பாளர்கள் தற்போது "பின்தங்கிய நிலையைச் சரிசெய்யப் போராடி வருகின்றனர்" என்றும், இந்தத் தொற்றுநோய் நிலை சீரடைவதற்கு முன்பு மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)