கோலாலம்பூர், மே 22 (பெர்னாமா) -- மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டி...
நாட்டின் மகளீர் ஒற்றையர் விளையாட்டாளரான கே. லெட்ஷனா, ஜப்பானின் ஹினா அகேச்சியிடம் தோல்வி கண்டதால், அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
Unifi Arena-வில் நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லெட்ஷனா, இரண்டாம் செட்டில் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதில் இருந்து தவறினார்.
சிலாங்கூரைச் சேர்ந்த அவர், இரண்டாம் மற்றும் மூன்றாம் செட்டில் பின்தங்கி நிலையில், 21-19, 12-21, 10-21 என்றப் புள்ளிகளில் தோல்வியடைந்தார்.
"இது ஒரு நல்ல போட்டி. எனினும், வெற்றி பெற முடியவில்லை என்று ஏமாற்றமாக உள்ளது. ஆனால், அவரும் இன்று சிறப்பாக விளையாடினார்," என்றார் அவர்.
23 வயதான இவரின் சூப்பர் 500 அந்தஸ்து கொண்ட போட்டித்தொடரில் மிக உயர்ந்த சாதனை, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் அரையிறுதிக்கு முன்னேறியதுதான்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)