Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜி.எஸ்.எஃப் 2.0: விடுவிக்கக் கோருவதற்கான முயற்சிகளுக்கு தலைமையேற்பதாக பிரதமர் உறுதி

21/05/2026 05:39 PM

சிப்பாங், மே 21 (பெர்னாமா) -- இஸ்ரேல் கடத்தி தடுத்து வைத்துள்ள Global Sumud Flotilla 2.0 மனிதாபிமான ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கக் கோருவதற்காக இருவழி உறவுகளைப் பயன்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் தலைமையேற்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முழுமையான உத்தரவாதத்தையும் உறுதியையும் அளித்துள்ளார்.

பிரதமர் இன்று மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பில் அந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக Sumud Nusantara கட்டளை மையம், எஸ்.என்.சி.சி தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி அப்துல் அலிம் அராபி தெரிவித்தார்.

"அவர் அதிகபட்ச உறுதிமொழிகளை வழங்கியதோடு, நெருங்கிய இருவழி உறவுகளைப் பயன்படுத்தியும், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும், கடத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோருவதற்காக, மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து அனைத்து முயற்சிகளுக்கும் தலைமையேற்று வருகிறார்," என்றார் அவர்.

இன்று, ஜி.எஸ்.எஃப் 2.0 பயணம் குறித்த அண்மைய நிலவரத்தை பகிர்ந்துக் கொள்ளும் செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ சானி அராபி அவ்வாறு குறிப்பிட்டார்.

துருக்கி மற்றும் பல நாடுகளுடனான தனது அரசதந்திர முயற்சிகளை, விஸ்மா புத்ரா இரட்டிப்பாக்கி வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், எஸ்.என்.சி.சி-க்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த மனிதாபிமான உதவிக் கப்பல் குழுப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசியர்களின் பாதுகாப்பையும் விடுதலையையும் உறுதி செய்வதற்காக இஸ்தான்புல், அம்மான் மற்றும் கெய்ரோவில் உள்ள தூதரகப் பிரதிநிதிகளைத் தயார்படுத்துவதும் இதில் அடங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)