ரோம், 18 மே (பெர்னாமா) -- இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை யானிக் சின்னர் வென்று தமது உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
சொந்த ஊரில் விளையாடிய அவர் கூடுதல் பலத்துடன் களமிறங்கினார்.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யானிக் சின்னர் நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எந்த சிரமத்தையும் எதிர்நோக்காமல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சின்னர் 6-4 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு இப்போட்டியின் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராசிடம் தோல்வியடைந்த அவர், தமது ஏழாவது முயற்சியில் நீண்டகாலமாக சொந்த மண்ணில் கிடைக்காமல் இருந்த பட்டத்தை இறுதியாகக் கைப்பற்றினார்.
1976-ஆம் ஆண்டில் எட்ரியானோ பனாட்டாவுக்குப் பிறகு, ரோமில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் வெற்றியாளர் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியர் என்ற பெருமையையும் சின்னர் பெற்றுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)