Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து; பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

15/05/2026 03:45 PM

ஈப்போ, 15 மே (பெர்னாமா) -- இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடந்த திங்கட்கிழமை பங்கோர் தீவு கடல் பகுதியில் மூழ்கிய நிலையில், அப்படகில் பயணித்ததாக நம்பப்படும் மேலும் ஓர் ஆடவரின் சடலத்தை இன்று மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர்.

இதன் வழி இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து வடகிழக்கே 3.6 கடல் மைல் தொலைவில், இரவு மணி 7.40க்கு  மீனவர் ஒருவரால் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பேராக் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், ஏ.பி.எம்.எம் தெரிவித்தது. 

மேலும், காணாமல் போன நால்வரைத் தேடும் பணி இன்று காலை மணி 7க்கு தொடரப்பட்டதாக ஏ.பி.எம்.எம் அறிவித்தது.

இப்படகு விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று ஐந்தாவது நாளாகத் தொடரப்படுகிறது.

37 இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் அப்படகு, மலேசியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணித்த வேளையில், கடந்த மே 11-ஆம் தேதி பங்கோர் தீவின் கடற்பரப்பில் மூழ்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)